Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
காரமான மல்வானி சிக்கன் குழம்பு
எப்போது பார்த்தாலும் சிக்கனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் அந்த சிக்கனை மஹாராஸ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் செய்யப்படும் குழம்பு போன்று, வீட்டில் சமைத்து பார்க்கலாம். இதற்கு மல்வானி சிக்கன் குழம்பு என்று பெயர். இந்த மல்வானி சிக்கன் குழம்பு மிகவும் காரசாரமான அசைவ குழம்புகளில் ஒன்று.
இப்போது அந்த மல்வானி சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)
வெங்காயம் - 4 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
மிளகு - 5
ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 1
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சிக்கனை ஊற வைப்பதற்கு...
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பல்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 1/2 கட்டு
ஜாதிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் முழுவதையும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொண்டு, அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, மிளகு, அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து வதக்கி, பின் அதில் பாதி வெங்காயத்தை போட்டு, நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு, அடுத்த 3-4 நிமிடம் வதக்கி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை சேர்த்து, மீதமுள்ள வெங்காயத்தையும் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மசாலாக்கள் அனைத்தும் சிக்கனுடன் சேருமாறு பிரட்ட வேண்டும்.
அடுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, வேண்டிய அளவில் தண்ணீர் சேர்த்து, குழம்பை நன்கு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான மல்வானி சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
