Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சேலம் மட்டன் குழம்பு
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும்.
இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
