Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
இறால் மலாய் குழம்பு
பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலானோர் இறாலை வறுவல் போன்று செய்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் பெங்காலியில் பிரபலமான இறால் மலாய் குழம்பாக செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த இறால் மலாய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது)
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது)
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)
தேங்காய் பால் - 1 கப்
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
