Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
கறிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
250 கிராம் ஆட்டிறைச்சி, 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டி விழுது, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கசகசா தூள், 1 மேசைக்கரண்டி தேங்காய் விழுது, 1 மேசைக்கரண்டி வெங்காய விழுது, 1 தேக்கரண்டி சோம்புத் தூள், 1 மேசைக்கரண்டி எண்ணெய், 1 மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம், 1 தேக்கரண்டி கரம் மசாலா, சிறிதளவு கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை.
செய்முறை:
ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து கழுவி, குக்கரில் போட்டு வைக்கவும். அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள, இஞ்சி பூண்டு வெங்காய விழுது, தேங்காய் விழுது, சோம்பு, கசகசா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இவற்றுடன் 200 மில்லி தண்ணீரும் சிறிதளவு உப்பும் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரம் மசாலா தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் குக்கரில் தயாரித்த இறைச்சிக் குழம்பை தாளித்துக் கொட்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு மூடி வைக்கவும்.
உப்பு, காரத்தை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
