For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான மாங்காய் மீன் குழம்பு

By Mayura Akilan
|

மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மீன் - அரை கிலோ
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் -2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1- ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்
மல்லி கருவேப்பிலை - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

குழம்பு செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி மஞ்சள் உப்பு போட்டு அலசி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.சதை பற்றான கொட்டையில்லாத சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளி ஊறவைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடவும்,நன்கு மசிந்து விடும்,அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கி மணம் வரவேண்டும்.

நன்கு கொதி வந்த உடன் ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும் அப்போது நறுக்கிய மாங்காய் சேர்க்கவும். சிறிது கொதி வரவும் மீனை போடவும். மாங்காயும் மீனும் வெந்து வரும். அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். நன்கு கொதிவரவும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரவும் குழம்பு ரெடி. விரும்பினால் மல்லி இலை தூவி இறக்கவும். நறுக்கிய மாங்காய்,சிறிது நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்வதால் குழம்பு சூப்பராக இருக்கும்.

English summary

Mango fish curry | சுவையான மாங்காய் மீன் குழம்பு

Many of us like fish to be cooked in curry. I often add tamarind in my curry, but this time I added raw mango pieces and made the curry.
Story first published: Monday, July 2, 2012, 17:31 [IST]
Desktop Bottom Promotion