Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
மல்வானி இறால் குழம்பு
மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதனை செய்முறை மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1
வரமிளகாய் - 2
கிராம்பு - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications