Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
காரசாரமான... குட்டநாடன் மீன் குழம்பு
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம்.
சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மீன் - 1 கிலோ
புளி (குடம்புளி) - 4 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
பூண்டு - 6-7 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 1-2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குடம்புளி அல்லது புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து 10 நொடிகள் தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதற்குள் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூளை 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, வாணலியில் ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு ஊற வைத்த குடம்புளியை நன்கு கையால் பிசைந்து, அதனை அப்படியே வாணலியில் ஊற்றி, வேண்டுமானால் அத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் நன்கு மீனை கொதிக்க விட்டு இறக்கி, 30 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், குட்டநாடன் மீன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: vazhayila



Click it and Unblock the Notifications
