Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
காரைக்குடி நண்டு மசாலா
நண்டு மசாலா ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொருவிதமாக சமைக்கப்படும். ஆனால் காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
மேலும் இந்த காரைக்குடி நண்டு மசாலாவை சாதம் மட்டுமின்றி, தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடனும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த காரைக்குடி நண்டு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
புளிக்கரைசல் - 1 கப்
பட்டை - 2
பிரியாணி இலை -2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும்.
பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
