For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ஸ்டைல் சில்லி சிக்கன்: வீடியோ

By Maha
|

பெரும்பாலானோருக்கு சில்லி சிக்கன் மிகவும் விருப்பமானதாக இருக்கும். இத்தகயை சில்லி சிக்கனை பொதுவாக சைனீஸ் ஸ்டைலில் தான் அனைவரும் சுவைத்திருப்போம். ஆனால் அந்த சில்லி சிக்கனை இந்தியன் ஸ்டைலில் கூட சமைக்கலாம். ஆனால் இதற்கு சோயா சாஸ் மட்டும் மிகவும் அவசியம். ஏனெனில் அது தான் சுவையைக் கொடுக்கிறது.

இங்கு அந்த இந்தியன் ஸ்டைல் சில்லி சிக்கனின் வீடியோ மட்டுமின்றி, அதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்து உங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTUzMjEzfHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
முட்டை - 1
சிக்கன் ஸ்டாக் - 1 கப்
தக்காளி கெட்ச்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
சோள மாவு - 1 கப்
மைதா - 1/2 கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி ஒரு பௌலில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் சோள மாவு, மைதா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு 7-8 நிமிடம் வேக வைத்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நந்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சோயா சாஸ், வினிகர், சில்லி சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து நன்கு கிளறி, 1 நிமிடம் வேக வைத்து, அடுத்து அதில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கலவையானது ஓரளவு கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு, கிளறி விட வேண்டும். ஒருவேளை அதிக அளவில் தண்ணீர் இருப்பது போன்று இருந்தால், அத்துடன் 1 டீஸ்பூன் சோள மாவு சேர்த்து கிளறினால், அதில் உள்ள அதிகப்படியான நீரானது குறைந்துவிடும். பின் அதில் வெங்காயத் தாள் தூவி கிளறி இறக்கினால், இந்தியன் ஸ்டைல் சில்லி சிக்கன் ரெடி!!!

குறிப்பு:

இதில் அதிக அளவில் உப்பு சேர்க்க வேண்டாம். ஏனெனில் சோயா சாஸில் ஏற்கனவே உப்பு இருப்பதால், இறுதியில் உப்பு சேர்க்காமல் இருப்பதே நல்லது.

English summary

Indian Style Chilli Chicken: Video

Chilli chicken is a recipe that we all have among our favourites. However, this chilli chicken recipe with video with help you make it perfectly..&#13;
Desktop Bottom Promotion