Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
குஜராத்தி சிக்கன் குழம்பு
இந்தியாவிலேயே பல வகைகளில் சிக்கன் குழம்பை வைப்பார்கள். அதில் ஒன்று குஜராத்தி சிக்கன் குழம்பு. இந்த ஸ்டைல் குழம்பின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் குஜராத்தி மசாலா தான். கார உணவுகளை விரும்பி சாப்பிடுவோருக்கு இது ஓர் அருமையான ரெசிபி. மேலும் இ விடுமுறை நாட்களில் வித்தியாசமாக செய்து சாப்பிட ஏற்ற ரெசிபியும் கூட.
சரி, இப்போது அந்த குஜராத்தி சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
தக்காளி - 3 (பெரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (பெரியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
குஜராத்தி மசாலா - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
பட்டை - 1
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 6
கிராம்பு - 5
அன்னாசிப்பூ - 1
மசாலாப் பொடிகள்...
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
குஜராத்தி மசாலாவிற்கு...
இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது)
பூண்டு - 30 பற்கள்
பச்சை மிளகாய் - 7
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குஜராத்தி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளத்து, பின் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள குஜராத்தி மசாலா, உப்பு, மசாலாப் பொடிகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வக்கி, பின் சிக்கனை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேருமாறு பிரட்டி விட வேண்டும்.
பின் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவினால், குஜராத்தி சிக்கன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
