Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
பொதுவாக காலை வேளையில் சீக்கிரம் சமைக்கும் வகையில் இருக்கும் ரெசிபியைத் தான் செய்ய நினைப்போம். ஏனெனில் யாருக்கும் காலையில் எழுந்ததும், நல்ல வகை வகையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆகவே அப்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், விரைவில் சமைக்கும் வகையிலும் ஒரு ரெசிபி உள்ளது.
அதற்கு முட்டை, உருளைக்கிழங்கு இருந்தால் போதுமானது. இந்த ரெசிபிக்கு ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் என்று பெயர். இது சாதாரணமாக செய்யும் ஆம்லெட் போன்றது தான். ஆனால் என்ன உருளைக்கிழங்கு சேர்த்ததால், இது உருளைக்கிழங்கு ஆம்லெட் ஆயிற்று. சரி, இப்போது அந்த ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
அதே சமயம் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த உருளைக்கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
