Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சுவையான பூனா கோஸ்ட் ரெசிபி
பூனா கோஸ்ட் என்பது ஒரு பாரம்பரிய இந்திய மட்டன் ரெசிபிக்களுள் ஒன்று. இந்த ரெசிபியானது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதிலும் இதனை விருந்தினர்கள் வரும் போது செய்தால், விருந்தினர்களிடம் நல்ல பெயரை வாங்கலாம்.
சரி, இப்போது அந்த பூனா கோஸ்ட் என்னும் மட்டன் பூனா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 600 கிராம்
கடுகு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 4-5
மிளகு - 5-6
கருப்பு ஏலக்காய் - 3-4
பச்சை ஏலக்காய் - 3-4
பிரியாணி இலை - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 10-12 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனை இறக்கி 5 நிமிடம் குளிர வைத்து, மீண்டு அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* எண்ணெயானது சூடானதும், அதில் கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை மற்றும் பட்டை போட்டு தாளிக்க வேண்டும்.
* பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
* அடுத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் தயிர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, எண்ணெய் தனியாக, மசாலா தனியாக வரும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூனா கோஸ்ட் ரெடி!!!



Click it and Unblock the Notifications