Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
தஹி கோஸ்ட்: மட்டன் ரெசிபி
வட இந்தியாவில் பிரபலமான ஒரு அசைவ உணவு தான் தஹி கோஸ்ட். இதில் தஹி என்றால் தயிர், கோஸ்ட் என்றால் மட்டன். எனவே தயிரையும் மட்டனையும் முக்கியப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஒரு கிரேவி தான் தஹி கோஸ்ட். இது மிகவும் சுவையுடன் இருக்கும். இந்த கிரேவியை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இதனை செய்துவது மிகவும் எளிது. சரி, இப்போது அந்த தஹி கோஸ்ட்டின் செய்முறைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம்
தயிர் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, உப்பு, தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.பச்சை மிளகாய் போட்டு கலந்து, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை வதக்கவும்.
பின் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, சற்று கெட்டியான கிரேவி போல் வந்ததும், இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தஹி கோஸ்ட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
