Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ரம்ஜான் ஸ்பெஷல் மீன் கபாப்
ரம்ஜான் நோன்பானது ஆரம்பமாகிவிட்டது. இஸ்லாமியர்கள் சூரியன் உதிக்கும் போது நோன்பை ஆரம்பித்து, அது மறையும் போது நோன்பை முடிப்பார்கள். அப்படி முடிக்கும் தருணத்தில் நல்ல சுவையான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுவிட்டு பின் சிரமப்படுவார்கள். ஆனால் அப்படி சிரமப்படாமல் இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவை அளவாக உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் மீன் கபாப் மிகவும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி என்று சொல்லலாம். அதனை செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மீனின் மூலம் கிடைக்கும். இங்கு அந்த மீன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மீன் - 500 கிராம்
கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, மீனை தட்டில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கடலைப்பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, தனியாக வைத்துள்ள மீனை கையால் மசித்து, அத்துடன் அரைத்த கடலைப் பருப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காய பேஸ்ட் மற்றும் வினிகர் சேர்த்து பிசைந்து, பின் அதனை 5-6 உருண்டைகளாக பிரித்து, ஒவ்வொரு உருண்டையையும் தட்டையாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கடலை மாவை தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் கபாப்பை கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீன் கபாப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
