Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சில்லி சிக்கன் கராஹி
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - அரை கிலோ.
பச்சை மிளகாய் (அரிந்தது) - 4.
சமையல் எண்ணெய். உப்பு. மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி.
இஞ்சி (அரைத்தது) - 1 தேக்கரண்டி.
பூண்டு (அரைத்தது) - 2 தேக்கரண்டி.
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி.
கசகசா - அரை தேக்கரண்டி.
எலுமிச்சை சாறு (2 பழங்கள்)
நறுக்கிய வெங்காயம் - 2.
நறுக்கிய தக்காளி - 2.
கறிவேப்பிலை - கொஞ்சூண்டு.
கொத்தமல்லி - அதுவும் கொஞ்சூண்டு.
செய்முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சியை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு இவை இரண்டையும் கோழிக் கறியுடன் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும். 2 பச்சை மிளகாய்களை எடுத்துக் கொண்டு அதிலிருந்து விதைகளை நீக்கி விடவும். அதை எண்ணெயில் விட்டு லேசாக வறுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, கசகசா, சிறிது வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு சுமார் 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் வதக்கவும். மசாலாவை இதனுடன் சேர்க்க வேண்டாம்.
இப்போது கோழிக் கறியை எடுத்து இதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிண்டி விடவும். பிறகு தக்காளிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல சூட்டில் வறுக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்கனவே வறுத்த பச்சை மிளகாய்கள், கொத்தமல்லி, மிச்சமுள்ள எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றை கறியுடன் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் ஊற விடவும்.
இப்போது சூடான, சுவையான சில்லி சிக்கன் கராஹி ரெடி. சூடு போவதற்குள் ஒரு பிடி பிடித்தால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications