Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
சிக்கன் மசாலா ரைஸ்
இதுவரை சிக்கனை கொண்டு எத்தனையோ ரெசிபிக்களை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் சிக்கன் மசாலா ரைஸ் செய்ததுண்டா? இந்த ரெசிபி வித்தியாசமான செய்முறை கொண்டிருப்பது மட்டுமின்றி, விடுமுறை நாட்களில் சுவையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், இதனை செய்து சாப்பிடலாம்.
அந்த அளவில் இந்த ரெசிபியானது சுவையுடன் இருக்கும். இப்போது அந்த சிக்கன் மசாலா ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த சிக்கன் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி நன்கு 10-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு, பின் அந்த நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரிசியைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.
பிறகு வாணலியில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் தக்காளி மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பூண்டு பொடி/பேஸ்ட் மற்றம் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் அதில் 2 கப் சிக்கன் நீரை ஊற்றி, பின் அதில் 3 கப் சாதாரண நீரை ஊற்றி, அத்துடன் அரிசி மற்றும் சிக்கன் துண்டுகளைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து எடுத்தால், சுவையான சிக்கன் மசாலா ரைஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
