Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சன்டே ஸ்பெஷல்!!! ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :
சிக்கன் - 750 கிராம்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 3 டீஸ்பூன்
நீள வரமிளகாய் - 75 கிராம்
சின்ன வரமிளகாய் - 25 கிராம்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பிறகு அந்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு தயிர், மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் 6-8 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் நீள வரமிளகாய், சின்ன வரமிளகாய், வெந்தயம், சீரகம், பூண்டு பேஸ்ட், புளி ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை சூடு போகும் வரை காய வைத்து, மிக்ஸியில் அவை அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், அரைத்த அந்த பேஸ்டை போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் வறுத்த சிக்கனை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை சிம்மில் வைத்து, 3 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
பின்னர் அதனை இறக்கி அதில் கொத்தமல்லியை நறுக்கி மேலே தூவி இறக்கவும். இப்போது சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
