கோழிக்கறி தோசை

By Staff


தேவையான பொருட்கள்:

200 கிராம் கோழிக்கறி, 250 கிராம் மைதா மாவு, 1 மேசைக்கரண்டி தயிர், 1 மேசைக்கரண்டி அரிசி மாவு, 4 பச்சை மிளகாய், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டி விழுது, 1 மேசைக்கரண்டி காரட் துருவல், தேவையான அளவு எண்ணெய், உப்பு

செய்முறை:

கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் அரைத்து எடுக்கவும். அதனுடன் கறி, மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும். மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விடவும். நன்றாக வெந்த பின் மறுபக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Story first published: Wednesday, October 3, 2007, 12:55 [IST]
Desktop Bottom Promotion