For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறு மொறுப்பான ஃபிஷ் பகேராஸ் செய்வது எப்படி?குறைவான நேரத்தில் ஈசியான ரெஸிபி!!

மொறுமொறுப்பான சுவையான பேட்டர் ஃபைரைடு ஃபிஷ் செய்யும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

பேட்டர் ப்ரைடு ஃபிஷ் ஒரு சுவையான ரெசிபி ஆகும். இது ஃபிஷ் பகேராஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் எளிதாக குறைந்த நேரத்தில் செய்யும் ரெசிபி ஆகும். இதன் சுவையானது அதை சூடாக பரிமாறும் போது தான் அருமையாக இருக்கும். இந்த ஃபிஷ் பகேராஸ் இந்தியாவின் எல்லா இடங்களிலும் செய்யப்படுகிறது.

ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகும் ஃபிஷ் பகேராஸ் அமிர்தசரஸில் உள்ள தெருவோரக் கடைகளில் செய்யப்படும் சுவை மிகுந்த ரெசிபி பாணியில் இருக்கக் போகிறது. அங்கே இந்த ரெசிபி மிகவும் புகழ் பெற்றது. அங்கே செய்யப்படும் ஃபிஷ் பகேராஸ் வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும். இந்த பாணியில் சமைப்பது அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாப்பில் தான் உள்ளது.

அங்கே தெருவில் உள்ள எல்லா உணவுக் கடைகளிலும் இந்த ரெசிபியை விற்பனை செய்வார்கள். அந்த அளவுக்கு இது மிகவும் புகழ் பெற்றது. பேட்டர் ப்ரைடு ஃபிஷ் கெளுத்தி மீனில் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை கேட் ஃபிஷ் என்பர். இந்த வகை மீன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் காட் மீன், ரெளட் மீன் மற்றும் சால்மன் மீன் பயன்படுத்தலாம். அதிகமான முள்கள் இல்லாத மீனாக இருந்தால் நல்லது. நல்ல ஃபிரஷ் ஆன மீன்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும்.

பிரிட்ஜில் வைத்த மீன்களையும் பயன்படுத்தலாம். இந்த ரெசிபியில் ஓமம் விதைகள், கடலை மாவு போன்றவை எல்லா பேட்டர் ப்ரைடு ஃபிஷ் செய்முறைக்கும் பொதுவானதாகும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இங்கே சோடா பானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோடா பானம் மீனை ரொம்ப மொறு மொறுப்பாக வைக்க உதவுகிறது. சில பேர் சோடா பானத்திற்கு பதிலாக பீர் அல்லது தண்ணீர் பயன்படுத்துவர். ஆனால் அந்த அளவு மொறு மொறுப்பான சுவை இதில் கிடைக்காது.

என்னங்க இப்பவே இதை பற்றிய சுவை நாக்கை இழுக்குதா சரி வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சிங்காரா மீன் அல்லது கெளுத்தி மீன் - 500 கிராம்
கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சோடா பானம் - 1/2 பாட்டில்
ஆரஞ்சு கலர் பொடி - தேவைக்கேற்ப
லெமன் - 2
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா-1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

1. ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
2. நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
3. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும் . பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.
4. அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.

5. இப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
6. சிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும்.
7. பிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
8. மீனை நன்றாக பொரியும் வண்ணம் திருப்பி திருப்பி விட்டு பொரிக்க வேண்டும்.

9. மீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். இதை செய்வதற்கு 2 நிமிடங்கள் ஆகும்.
10. இதே செய்முறையை மற்ற மீன் துண்டுகளுக்கும் செய்ய வேண்டும்.
11. இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.
இன்னும் ஏன் வைட் பண்ணுரிங்க இந்த மொறு மொறுப்பான பேட்டர் ப்ரைடு ஃபிஷ் ரெசிபியை உங்க வீட்டிலும் செய்து அசத்துங்கள்.

English summary

Batter Fried Fish – Street Food Style

Batter Fried Fish – Street Food Style
Desktop Bottom Promotion