Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு
மட்டன் கைமாவை பலருக்கும் சரியாக சமைத்து சாப்பிடத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதனைக் கொண்டு வெறும் வடை தான் செய்யத் தெரியும். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? அதிலும் ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கைமா குழம்பு செய்து சாப்பிடலாம்.
இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 250 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டன் கைமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளி, ஊற வைத்த கைமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து பார்த்து, குழம்பு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
