Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஆந்திரா முட்டை குழம்பு: வீடியோ
முட்டையைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் முட்டை குழம்பு. அதிலும் அந்த முட்டை குழம்பை ஆந்திரா ஸ்டைலில் சமைத்து சாப்பிட்டால், அது இன்னும் சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த முட்டை குழம்பானது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று வீடியோவுடன் தெளிவாக கொடுத்துள்ளோம். அதன்படி செய்து சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/TZn8VCegTEQ?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை - 10
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
புளிச்சாறு - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பின்பு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள முட்டையில் ஆங்காங்கு கீறி விட்டு, வாணலியில் போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஆந்திரா முட்டை குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications
