Latest Updates
-
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!
10 நிமிடத்தில் வெங்காயம் தக்காளி சேர்க்காம இட்லி, சப்பாத்திக்கு குருமா செய்யலாம் தெரியுமா?
No Onion No Tomato Kurma Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் குருமாவை செய்யுங்கள்.
அதுவும் வெங்காயம், தக்காளி சேர்க்காமல் செய்யக்கூடிய ப்ளைன் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா இட்லி, தோசைக்கு மட்டுமன்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காமல் செய்யக்கூடிய குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 5 சிறிய துண்டு
* முந்திரி - 10
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
குருமாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* கல்பாசி - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, முந்திரி சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கசகசா மற்றும் சோம்பு சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கேரட் மற்றும் பீன்ஸ், கறிவேப்பிலை சேர்த்து, 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, அரைத்து
வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான ப்ளைன் குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications