Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
தெருவே மணக்கும் நீலகிரி சிக்கன் குருமா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அப்புறம் அடிக்கடி செய்வீங்க...!
Nilgiri Chicken Kurma Recipe in Tamil: இந்த வாரமும் அசைவ உணவை மகிழ்ச்சியாக சாப்பிட சண்டே வந்துவிட்டது. வாரம் முழுக்க அசைவ உணவுகள் சாப்பிட்டாலும் சண்டே சாப்பிடுவது கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல்தான். ஒவ்வொரு வாரமும் சிக்கன் சாப்பிட்டாலும் ஒரே மாதிரியான ஸ்டைலில் சாப்பிட்டால் நிச்சயம் போரடிக்கும் அல்லவா?
மற்ற எந்த இறைச்சியையும் விட சிக்கனை ஆயிரக்கணக்கான வழிகளில் சுவையாக சமைக்கலாம். அப்படி அதில் ஒன்றுதான் நீலகிரி சிக்கன் குருமா. கோடைகாலம் வந்தாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊட்டிதான். இந்த சிக்கன் குருமாவை செய்து சாப்பிட்டால் இனி இதற்காகவும் அடிக்கடி ஊட்டியை நினைக்க வேண்டியிருக்கும்.

இந்த நீலகிரி சிக்கன் குருமா சாதத்துடன் மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த சிக்கன் குருமா உங்கள் சண்டேவை கூடுதல் சிறப்பாக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த காரசாரமான நீலகிரி சிக்கன் குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்,
- பட்டை - 1 இன்ச்
- ஏலக்காய் - 2
- துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்
- முந்திரி - 5
- பச்சை மிளகாய் - 4
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- புதினா - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றை 1 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் அதனுடன் முந்திரி, தேங்காய்,
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து
பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
- அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
- பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.
- சிக்கன் ஓரளவு வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்
- சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி. இது சாதத்துடனும், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











