Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்!
மணமணக்கும்... கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பை எப்படி செய்யணும் தெரியுமா?
Nethili Karuvattu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் கருவாட்டை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் நீங்கள் தான் அடிக்கடி செய்யமாட்டீர்களா? இன்று வீட்டில் உள்ளோருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தால், வீட்டில் நெத்திலி கருவாடு இருந்தால், அதைக் கொண்டு கிராமத்து ஸ்டைலில் நெத்திலி கருவாட்டு குழம்பை செய்யுங்கள்.
இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, வீடே மணக்கும் வகையிலும் இருக்கும். ஏன் இப்படி குழம்பு செய்தால், கருவாடு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை அள்ளும். முக்கியமாக இந்த குழம்பு குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைலில் நெத்திலி கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* கத்திரிக்காய் - 150 கிராம் (நீளவாக்கில் வெட்டியது)
* முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ள
வேண்டும்)
* உப்பு - தேவையான அளவு
* நெத்திலி கருவாடு - 100 கிராம்
செய்முறை:
* முதலில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை நன்கு மென்மையாக
தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் கருவாட்டை சுடுநீரில் போட்டு, அதில் உள்ள செதில்களை
நீக்கிவிட்டு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு புளியை நீரில் ஊற வைத்து, அதை கரைத்து சாறு எடுத்து, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய்
மற்றும் கடலை எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை
சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து,
1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை
சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுத்தம் செய்து
வைத்துள்ள நெத்திலி கருவாட்டை சேர்த்து, குழம்பு சற்று சுண்டி எண்ணெய்
மிதக்கத் தொடங்கும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெத்திலி
கருவாட்டு குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











