Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
நவராத்திரி ஸ்பெஷல் பீட்ரூட் பாயாசம்
Navratri 2023: நீங்கள் பாயாசப் பிரியரா? பாயாசத்தை அடிக்கடி செய்து சாப்பிடுவீர்களா? இதுவரை எத்தனையோ பாயாசத்தை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பீட்ரூட் பாயாசத்தை என்றாவது செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால், இந்த நவராத்திரிக்கு பீட்ரூட் பாயாசத்தை செய்து துர்கா தேவிக்கு படையுங்கள். பீட்ரூட் பாயாசம் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு பீட்ரூட் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பால் - 2 1/2 கப்
* நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உடைத்த முந்திரி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பீட்ரூட் - 1 கப் (துருவியது)
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாலை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரையை முற்றிலும் உருக வைக்க வேண்டும். சர்க்கரை உருகியதும், குளிர வைத்துள்ள பாலை ஊற்றி கிளறி குறைவான தீயில் வைத்து 10-12 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பாயாசம் தயார்.
குறிப்பு:
* பீட்ரூட்டின் பச்சை வாசனை போகாமல் சர்க்கரையை சேர்த்துவிடாதீர்கள்.
* பாயாசத்தின் சுவை இன்னும் தூக்கலாக இருக்க வேண்டுமானால், இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









