Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
புரட்டாசி ஸ்பெஷலா வீட்டுல ஒருடைம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீராவை செஞ்சு பாருங்களேன்..
Navratri 2024 Special Srirangam Jeera Recipe In Tamil: நவராத்திரி தொடங்கிவிட்டது. பலர் வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். அப்படி கொலு வைத்துள்ள வீடுகளில் மாலை வேளையில் பிரசாதம் ஏதாவது செய்து படைத்து, வீட்டிற்கு வருவோருக்கு வழங்குவார்கள். உங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளீர்களா?
மாலையில் என்ன பிரசாதம் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மாலையில் சுண்டல் செய்து, அத்துடன் ஸ்ரீரங்கம் கோவிலில் கொடுக்கும் பிரசாதமான ஜீராவையும் செய்யுங்கள். இந்த ஜீரா கேசரி போன்று காணப்பட்டாலும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீராவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் ஜீரா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்கண்டு - 1 கப்
* தண்ணீர் - 2 1/4
* ரவை - 1 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் - மிகச்சிறிய துண்டு
(குறிப்பு: 1 கப் என்பது எந்த கப்பில் ரவையை எடுக்கிறீர்களோ, அதே கப்பில் அனைத்து பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.)
செய்முறை:
* முதலில் கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 2 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து
நன்கு சூடேற்ற வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், அதில் ரவையை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் கொதித்துக் கொண்டிருக்கும் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக
ஊற்றி நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கரையும் வரை
கிளறி விட வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள கற்கண்டை
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் பச்சை
கற்பூரத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ஸ்ரீரங்கம் ஜீரா
தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications








