Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
மணமணக்கும்... செட்டிநாடு மட்டன் உப்புக்கறி - எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Mutton Uppu Kari Recipe In Tamil: உங்கள் வீட்டில் மட்டன் வாங்கினால் எப்போதும் ஒரே மாதிரி குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? அவ்வப்போது மட்டனைக் கொண்டு சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் தான், மட்டன் போர் அடிக்காமல் இருக்கும்.
அதுவும் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மட்டன் வாங்கினால், வெறும் குழம்பு மட்டும் செய்யாமல், சிறிது மட்டனைக் கொண்டு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியையும் செய்யுங்கள். இது நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் உப்புக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* வரமிளகாய் - 15
* பட்டை - 1 துண்டு
* பூண்டு - 12 பற்கள்
* சின்ன வெங்காயம் - 30 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கல் உப்பு - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத மட்டன் நன்கு நீரில் கழுவி சிறுசிறு
துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பிறகு அதல் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* தக்காளி வதங்கியதும், அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம்
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து 40 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 40 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மட்டனில் உள்ள நீர்
முற்றிலும் வற்றும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன்
உப்புக்கறி தயார்.



Click it and Unblock the Notifications
