1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்

Posted By:

Mutton Milagai Thokku Recipe in Tamil: இந்த வார சண்டே உங்கள் வீட்டில் மட்டன் சமைக்க போகிறீர்களா? எப்போதும் மட்டனை வாங்கினால் ஒரே மாதிரி குழம்பு, பிரியாணி, சுக்கா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மட்டன் வாங்கினால், கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் மட்டன் தொக்கு ரெசிபியை செய்யுங்கள். இந்த மட்டன் ரெசிபி செய்வது மிகவும் எளிதானதாகும். கார விரும்பிகள் இந்த மட்டன் தொக்கை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

Mutton Milagai Thokku Recipe How to Make at Home in Tamil

இந்த கிராமத்து ஸ்டைல் பச்சை மிளகாய் மட்டன் தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி புரோட்டா, சப்பாத்தி, தோசை போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட, சுவை வேற லெவலில் இருக்கும். ஒரே மாதிரி மட்டன் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த மட்டன் புது அனுபவமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த காரசாரமான பச்சை மிளகாய் மட்டன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மிளகாய் மட்டன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எபபடி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருதுக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- மட்டன் - ½ கிலோ
- சின்ன வெங்காயம் - 1 கப்
- பச்சை மிளகாய் - 8
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1½ டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
- சோம்பு - ½ டீஸ்பூன்
- சீரகம் - ½ டீஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 4
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கடலை எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

- முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- பின்னர் கழுவிய மட்டனுடன் மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு அல்லது மட்டன் மென்மையாக வேகும் வரை சமைக்கவும்.

- பச்சை மிளகாயைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். காரம் குறைவாக வேண்டுமென்றால் விதைகளை நீக்கிக் கொள்ளலாம்.

- ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

- மசாலா பொருட்கள் வாசனை வந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

- தக்காளி நன்கு குழைந்ததும் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- மசாலா பச்சை வாசனை நீங்கியதும் வேகவைத்த மட்டனைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- மட்டன் நன்கு வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் வரை நன்றாக வதக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

- அவ்வளவுதான் காரசாரமான கிராமத்து மட்டன் மிளகாய் தொக்கு ரெடி.

- இந்த மட்டன் மிளகாய் தொக்கு சூடான சாதம், ரசம் சாதம், தோசை, சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

[ of 5 - Users]
Story first published: Sunday, October 25, 2026, 9:21 [IST]
Desktop Bottom Promotion