Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
மட்டன் குழம்பை ஒருவாட்டி இந்த பக்குவத்துல, இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி செய்யுங்க.. மட்டன் பஞ்சு போல இருக்கும்..
Mutton Kuzhambu: சன்டே வந்தாலே உங்கள் வீட்டில் மட்டன் கட்டாயம் எடுப்பீர்களா? அப்படி மட்டன் எடுத்தால், அதை எப்போதும் ஒரே சுவையில் தான் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இனி மட்டன் எடுத்தால், அந்த மட்டனை இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்கள். இந்த மட்டன் குழம்பு இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மேலும் இந்த ஸ்டைலில் மட்டன் குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் எப்போதும் இந்த சுவையில் தான் குழம்பு செய்ய சொல்வார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும். அதோடு இந்த பக்குவத்தில் குழம்பு வைக்கும் போது, மட்டன் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - பாதி
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முந்திரி - 6
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (விருப்பமிருந்தால்)
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மட்டனைக் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, சோம்பு, மிளகு, கசகசாவை சேர்த்து சிறிது நேரம் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, கல்பாசியை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதோடு தயிர் மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட்டையும் சேர்த்து மட்டனை நன்கு கிளறி 5 நிமிடம் மிதமான தீயில்
வைத்து வதக்கி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி 3-4
நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி ஒரு கொதி
வந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பின்பு விருப்பமிருந்தால், அதில் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி
சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, குழம்பை கிளறி, மீண்டும் குக்கரை
அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரியவிட்டு, குழம்புடன்
சேர்த்து கிளறினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications