Latest Updates
-
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு சும்மா டக்கரா இருக்கும்...
Mutton Masala Curry Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கப் போகிறீர்களா? அதுவும் காலையில் பூரி அல்லது சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மட்டனைக் கொண்டு ஒரு கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி டக்கென்று 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். இந்த கிரேவியை பேச்சுலர்களும் செய்யலாம்.

உங்களுக்கு மட்டன் மசாலா கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 8-10 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கசகசா, மிளகு, சீரகம்,
சோம்பு, பூண்டு, இஞ்சி, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து
நன்கு 3-4 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில்
வைத்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான
தீயில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான மட்டன் மசாலா கறி தயார்.



Click it and Unblock the Notifications











