Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
Cabbage Vada Recipe : சுவையான... முட்டைக்கோஸ் வடை
உங்களுக்கு உளுந்து வடை என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இன்று அந்த உளுந்து வடையில் சற்று வித்தியாசமாக முட்டைக்கோஸ் சேர்த்து முட்டைக்கோஸ் வடை செய்யுங்கள்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வடை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறதா? அதுவும் உங்களுக்கு உளுந்து வடை என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இன்று அந்த உளுந்து வடையில் சற்று வித்தியாசமாக முட்டைக்கோஸ் சேர்த்து முட்டைக்கோஸ் வடை செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் வடை அட்டகாசமான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு மற்றும் நீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 3/4 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். (அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம்)
* மாவு நல்ல பதத்தில் உள்ளதா என்பதை கண்டறிய நீரில் அரைத்த மாவை சிறிது போடும் போது, அது மிதந்தவாறு இருந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு பௌலில் எடுத்து, அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் போட்டு எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications

