Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் போது இந்த பொருளை சேர்த்து செய்யுங்க... டெஸ்ட் தாறுமாறா இருக்கும்..ட்ரை பண்ணுங்க!
Cabbage Poriyal Recipe in Tamil: நம் வீடுகளில் சாம்பார், ரசம் போன்றவை வைக்கும் போது அதற்கு பொரியல் செய்வது என்பது மிகவும் அவசியமானதாகிறது. அனைத்து வீடுகளிலும் பொரியல் என்றாலே அதில் முட்டைக்கோஸ் பொரியல்தான் முதலிடத்தில் இருக்கும். வீடுகளில் மட்டுமல்ல கல்யாண வீடுகளில் கூட பொரியல் என்றால் முதலில் செய்யப்படுவது முட்டைக்கோஸ் பொரியல்தான்.
முட்டைக்கோஸ் பொரியல் சுவையானது, ஆரோக்கியமானது என்பதையும் தாண்டி செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. ஆனால் எவ்வளவு காலத்திற்குத்தான் ஒரே மாதிரி முட்டைக்கோஸ் பொரியலை செய்வது. சில பொருட்களை முட்டைகோஸ் பொரியலுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும். இந்த பதிவில் முட்டைக்கோஸ் பொரியலின் சுவையை அதிகரிக்க அதை எப்படி செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 2 கப் நைசாக துருவிய முட்டைக்கோஸ்
- கால் கப் பட்டாணி
- 1 துண்டு இஞ்சி(முக்கியமானது)
- 1 நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- கால் கப் துருவிய தேங்காய்
- 4 பச்சை மிளகாய்
- உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
- ஒரு முழு முட்டைக்கோஸை நைஸாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி நறுக்காமல் வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டை சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். முட்டைக்கோஸ் சுருங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து முட்டைக்கோஸ் நன்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- முட்டைக்கோஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதிலிருந்து இஞ்சி துண்டை வெளியே எடுத்து விடவும்.
- பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து முட்டைக்கோஸை நன்கு கிளறவும்.
- தேங்காய் சேர்த்தவுடன் 2 நிமிடம் முட்டைக்கோஸை நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- சூப்பரான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி. இதை சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications