Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
நைட் சப்பாத்திக்கு முட்டை கிரேவியை ஒருடைம் இப்படி செய்யுங்க.. 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Muttai Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வீட்டில் உள்ளோர் முட்டை கிரேவி செய்ய சொல்கிறார்களா? நீங்கள் எப்போதும் ஒரே டேஸ்ட்டில் தான் முட்டை கிரேவி செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டை கிரேவியை செய்யுங்கள்.
இப்படி முட்டை கிரேவி செய்யும் போது, அது சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். பேச்சுலர்களும் சுலபமாக செய்யலாம்.

உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 3 (அரைத்தது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை -1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* முட்டை - 6 (வேக வைத்தது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து பச்சை வசானை
போக வதக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி
வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள முட்டைகளை எடுத்து நடுவே கீறி விட்டு,
கிரேவியுடன் சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
