Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்!
Ramzan Eid 2026 Special Muslim Style Chicken Biryani Recipe in Tamil: எல்லோருக்கும் பிடித்த உணவென்றால் அந்த பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பிரியாணிதான். ஒவ்வொரு வருடமும் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது ரம்ஜான் வேறு வரப்போவதால் பிரியாணியை கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைனில் சாப்பிடுவார்கள்.
பிரியாணி என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பாய் வீட்டு பிரியாணிதான். ஆயிரக்கணக்கில் செலவழித்து ஹோட்டல்களில் பிரியாணி வாங்கி சாப்பிட்டாலும் முஸ்லீம் சகோதரர்கள் வீட்டில் சமைக்கும் பிரியாணியின் சுவைக்கு ஈடாகாது. எல்லோருக்கும் பாய் வீட்டு பிரியாணி கிடைக்கும் அதிர்ஷ்டம் இருப்பதில்லை.

நீங்களும் இந்த ரம்ஜானுக்கு பாய் வீட்டு பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டால் அந்த பிரியாணியின் ரெசிபியை தெரிந்து கொண்டு நீங்களே சமைத்து சாப்பிடுங்கள். பிரியாணி என்றாலே அது சீரக சம்பா அரிசிதான். இந்த பிரியாணி சுவையாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும்.
உங்களுக்கு பாய் வீட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தாளிக்க:
- 1/4 கப் எண்ணெய்
- 1/4 கோப்பை நெய்
- 3 பிரியாணி இலைகள்
- 5 கிராம்பு
- 2 துண்டு இலவங்கப்பட்டை
- 4 ஏலக்காய்கள்
- 1 அன்னாசிப்பூ (Star anise)
- 5 இதழ்கள் கல்பாசி
- 1 இதழ் ஜாவித்திரி
- 1 சிட்டிகை ஜாதிக்காய் தூள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் சோம்பு
பிரியாணி செய்ய:
- 2 கப் சீரக சம்பா அரிசி
- 4 கப் தண்ணீர்
மேரினேட் செய்ய:
- 1 கிலோ சிக்கன்
- அரை ஸ்பூன் உப்பு
மசாலா செய்ய:
- 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1/2 கப் தக்காளி, நறுக்கியது
- 6 பச்சை மிளகாய்கள்
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1/4 கப் புதினா இலைகள், நறுக்கியது
- 1/4 கப் கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
- 1/4 கப் தயிர்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் தனியா தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
அலங்கரிக்க:
- 1/4 கப் கொத்தமல்லி இலை
- 3 ஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் சீரகச் சம்பா அரிசியை, அது மூழ்கும் அளவுள்ள நீரில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
- சிக்கனை நன்றாக கழுவி அதில் உப்பு போட்டு ஊற வைக்கவும்.
- பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கல்பாசி, ஜாவித்திரி, ஜாதிக்காய், சீரகம், அன்னாசிப்பூ மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- அடுத்து இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போனதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- ஊறவைத்த சிக்கனுடன் தக்காளி, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான நீரை சேர்த்து, கலவையை நன்கு கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் ஊறவைத்த சம்பா அரிசியைச் சேர்த்து, 6 முதல் 7 நிமிடங்களுக்கு அதிகத் தீயில் கொதிக்கவிடவும்.
- அரிசி நீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி, கலவை சற்று கெட்டியான பதம் அடையும்; அப்போது அரிசி சுமார் 60% வெந்திருக்கும். இந்த நிலையில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து, மெதுவாக ஒருமுறை கிளறிவிடவும்.
- இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை இறுக்கமான மூடியால் மூடி, 15 நிமிடங்களுக்குத் திறக்காமல் 'தம்' போட்டு வேகவிடவும்.
- பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, 10 நிமிடங்களுக்குத் திறக்காமல் அப்படியே வைக்கவும், ஏனெனில், அந்த சூட்டிலேயே அரிசி தொடர்ந்து வேகும்.
- மூடியைத் திறந்து, மேலே சிறிது நெய் ஊற்றி, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். பின்னர் கறி உடையாமல் மெதுவாகக் கிளறிவிடவும்.
- அவ்வளவுதான் மணமணக்கும் பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெடி.



Click it and Unblock the Notifications








