Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
காளான் குருமா
இதுவரை நீங்கள் காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை முயற்சித்திருக்கலாம். ஆனால் காளான் குருமாவை செய்ததுண்டா? காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு காளான் பிடிக்குமா? அடிக்கடி காளானை வாங்கி சமைத்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை முயற்சித்திருக்கலாம். ஆனால் காளான் குருமாவை செய்ததுண்டா? காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு காளான் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 10-12
* நீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காயை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுத்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் காளானை சேர்த்து குறைவான தீயில் வைத்து 5-6 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மசாலா நன்கு வதங்கியதும், அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காளான் குருமா தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
