Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
மணமணக்கும்... காளான் பிரியாணி
காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது. அத்தகைய காளானைக் கொண்டு எப்போதும் கிரேவி செய்வதற்கு பதிலாக, அதைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிடுங்கள். காளான் பிரியாணி செய்வது மிகவும் ஈஸி.
நீங்கள் பிரியாணி பிரியரா? புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருள். ஏனெனில் காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது. அத்தகைய காளானைக் கொண்டு எப்போதும் கிரேவி செய்வதற்கு பதிலாக, அதைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிடுங்கள். காளான் பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக அதை செய்து சுவைத்த பின், எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப்
* காளான் - 200 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தேங்காய் பால் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
ஊற வைப்பதற்கு...
* தயிர் - 1/2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1/4 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய பாசுமதி அரிசியில் 1 1/2 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 கப் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் காளான், தயிர், நறுக்கிய தக்காளி, பாதி வதக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி கிளறி, கொதிக்க விட வேண்டும்.
* உலை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் 15 நிமிடம் அப்படியே தனியாக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள வதக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி மென்மையாக ஒருமுறை கிளறினால், காளான் பிரியாணி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
