Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
வீட்டுல முருங்கைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Murungakai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனாலேயே தினமும் ரசம் செய்ய வேண்டியிருக்குமா? எப்போதும் ஒரே மாதிரி தான் ரசம் செய்வீர்களா? சற்று வித்தியாசமான ரசத்தை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காயைக் கொண்டு ரசம் செய்யுங்கள்.

இந்த முருங்கைக்காய் ரசம் வழக்கமாக செய்யும் ரசத்தை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதோடு இந்த பக்குவத்தில் ரசத்தை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த முருங்கைக்காய் ரசத்தை வைத்து, சைடு டிஷ்ஷாக ஏதாவது பொரியல், சாப்ஸ், வறுவல் செய்து கொண்டால் போதும்.
இந்த முருங்கைக்காய் ரசம் குறித்து ஷில்பா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த முருங்கைக்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தக்காளி - 2
* முருங்கைக்காய் - 2
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
ரசம் கரைப்பதற்கு...
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்.)
* தக்காளி - 2
* வேக வைத்த பருப்பு
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* அரைத்த மிளகு, சீரகம்
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை போட்டு நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி, முருங்கைக்காய், மஞ்சள் தூள், எண்ணெய்
மற்றும் 2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது முருங்கைக்காயை எடுத்து,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த பருப்பு தக்காளியை நன்கு மசித்துவிட வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு பற்களை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை எடுத்துக் கொண்டு,
அதில் 2 தக்காளியை சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பருப்பை வடிகட்டியால் வடிகட்டி சேர்த்து,
அத்துடன் கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரசம் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து, அத்துடன்
முருங்கைக்காயை சேர்த்து, நுரைக்கட்டி ஒருமுறை கொதிக்க ஆரம்பித்ததும்,
அதை இறக்கினால், சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications