Latest Updates
-
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை
காரசாரமான.. சேப்பங்கிழங்கு சாப்ஸ் - இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. மட்டன், சிக்கன் சாப்ஸ் தோத்துடும்..
Cheppankilangu Chops Recipe In Tamil: உங்கள் வீட்டில் சேப்பங்கிழங்கு உள்ளதா? ஆனால் அதன் வழவழப்புத்தன்மையால் சமைத்து சாப்பிட யோசிக்கிறீர்களா? அப்படியானால் சேப்பங்கிழங்கைக் கொண்டு சாப்ஸ் செய்யுங்கள். இந்த சேப்பங்கிழங்கு சாப்ஸ் மொறுமொறுவென்றும், காரசாரமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி சாப்ஸ் செய்யும் போது, வழவழப்புத்தன்மையும் இருக்காது, மட்டன், சிக்கன் சாப்ஸ் போன்று ருசியாகவும் இருக்கும்.

இந்த பக்குவத்தில் சேப்பங்கிழங்கை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாப்ஸை வெறுமனே கூட சாப்பிடலாம். இல்லாவிட்டால் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
இந்த சேப்பங்கிழங்கு சாப்ஸ் குறித்து சமையல் வித் ஷேரன் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ப்ரை செய்வதற்கு..
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சேப்பங்கிழங்கை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கத்தியைக் கொண்டு கிழங்கை
குத்தும் போது எளிதில் சென்றால், கிழங்கு நன்கு வெந்துவிட்டது என்று
அர்த்தம். பின் அதன் தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,
சின்ன வெங்காயம், காஷ்மீரி வரமிளகாய், மற்றும் துருவிய தேங்காயை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை சற்று பெரிய பெரிய
துண்டுகளாக வெட்டி, அதில் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கைகளால் நன்கு
பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரட்டி வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து, கறிவேப்பிலை
தூவி நன்கு பிரட்டி விட்டு, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக
வைத்தால், நன்கு மொறுமொறுவென்று வந்துவிடும். இப்போது சுவையான
சேப்பங்கிழங்கு சாப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications
