Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மழை நேரத்துல சப்பாத்திக்கு இந்த முட்டை சாப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. மட்டன் சாப்ஸே தோத்துடும்..
Egg Chops Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், நன்கு காரசாரமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்கள் என்றால், அந்த சப்பாத்திக்கு இன்னும் சைடு டிஷ் எதுவும் முடிவு செய்யவில்லை என்றால், வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு முட்டை சாப்ஸ் செய்யுங்கள்.
அதுவும் இந்த பக்குவத்தில் முட்டை சாப்ஸை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 சப்பாத்தி அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த முட்டை சாப்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த முட்டை சாப்ஸை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு முட்டை சாப்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 5
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முட்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு உப்பு சேர்த்து, 10
நிமிடம் வேக வைத்து இறக்கிக் குளிர்ந்த நீரில் போட்டு ஊற
வையுங்கள்.
* பின் அதன் முட்டையின் ஓட்டினை நீக்கிவிட்டு, தனியாக வைத்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் மிளகை
சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும்
உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து எண்ணெய்
பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, வேக வைத்துள்ள முட்டைகளை ஆங்காங்கு கீறிவிட்டோ
அல்லது இரண்டாக வெட்டியோ, மசாலாவுடன் சேர்த்து நன்கு பிரட்டி, 2
நிமிடம் வேக வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை
சாப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications