Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா... மதியம் இப்படி குழம்பு செய்யுங்க.. சுவையானதும்.. சத்தானதும் கூட...
Murungai Keerai Kuzhambu Recipe In Tamil: கோடைக்காலத்தில் கீரையை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை சாப்பிட அடம்பிடிப்பார்களா? அதுவும் முருங்கைக்கீரை என்றால், அதன் கசப்பு சுவைக்காக சாப்பிட மறுப்பார்களா?
அப்படியானால் அவர்களுக்கு முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் செய்து கொடுக்காமல், குழம்பு செய்து கொடுங்கள். இந்த முருங்கைக்கீரை குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இப்படி முருங்கைக்கீரையை குழம்பு செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* புழுங்கல் அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் -1/4 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு
மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து, துவரம் பருப்பு லேசாக
பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு வரமிளகாயை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 1/4
டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து, நன்கு அரைத்து பொடித்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி கிளறி, மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை நீரில் கரைத்து ஊற்றி,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின் அதில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications