Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. காலையில் இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Murungai Keerai Chutney Recipe In Tamil: கீரையை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது என்பதை அறிவோம். அதுவும் விலைக்குறைவில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை தான் முருங்கைக்கீரை. இதுவரை நீங்கள் முருங்கைக்கீரையை பொரியல், சாம்பார், கூட்டு என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் முருங்கைக்கீரையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா?
இப்படி செய்யும் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவர்களுக்கு இந்த முருங்கைக்கீரையை அடிக்கடி கொடுத்து வர, இரும்புச்சத்து அதிகரிக்கும். அதுவும் முருங்கைக்கீரையை சாப்பிட மறுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு, அதைக் கொண்டு சட்னி செய்து கொடுக்கும் போது, கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம்
மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து, வெங்காயம், பச்சை
மிளகாய், வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து 7 நிமிடம்
நன்கு கீரை வேகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 2
டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2
டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
முருங்கைக்கீரை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
