Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
முருகன் இட்லி கடை ஸ்பெஷல் கடுகு சட்னி... சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Murugan Idli Kadai Kadugu Chutney In Tamil: இன்று உங்கள் வீட்டில் காலையில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்யாமல் சற்று சிம்பிளாகவும், வித்தியாசமான சுவையிலும் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் முருகன் இட்லி கடை ஸ்பெஷல் கடுகு சட்னியை ட்ரை பண்ணுங்கள். இந்த கடுகு சட்னி இட்லியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதுமானது. குறிப்பாக காலையில் டக்கென்று ஒரு சட்னி செய்ய நினைத்தால், இந்த சட்னியை செய்யலாம்.

உங்களுக்கு முருகன் இட்லி கடை கடுகு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருகன் இட்லி கடை கடுகு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுந்து - 3 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வரமிளகாய் - 1
* தக்காளி - 2 (நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 3 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின்பு அதில் 2 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, வரமிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி
நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, தாளிக்காமல் அப்படியே
பரிமாறினால், சுவையான கடுகு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











