Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் முகலாய் முட்டை கிரேவி!
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக இன்று முகலாய் முட்டை கிரேவி செய்யுங்கள். இது நாம் வழக்கமாக செய்யும் முட்டை கிரேவியில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக இன்று முகலாய் முட்டை கிரேவி செய்யுங்கள். இந்த முட்டை கிரேவிக்கு தக்காளி தேவையில்லை. மேலும் இது நாம் வழக்கமாக செய்யும் முட்டை கிரேவியில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் இந்த முகலாய் முட்டை கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண், புலாவ் போன்வற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு முகலாய் முட்டை கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகலாய் முட்டை கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 2 டீஸ்பூன்
* க்ரீம் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தி, சர்க்கரை மற்றும் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த முட்டைகளை நீளவாக்கில் இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டு, குறைவான தீயில் வைத்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முகலாய் முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

