Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
நாஞ்சில் நாட்டு கோழி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து இன்னிக்கு உங்க அம்மாவுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!
Mothers Day Special Nanjil Nattu Kozhi Kulambu Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்கப் போகிறீர்களா? எப்போது சிக்கனை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத ஒரு வித்தியாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள். அதுவும் நாஞ்சில் நாட்டு சுவையில் சிக்கன் குழம்பை செய்யுங்கள்.
இந்த சிக்கன் குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இன்று அன்னையர் தினம் என்பதால் உங்கள் அம்மாவிற்கு ஸ்பெஷலாக சமைத்து கொடுக்க நினைத்தால், நிச்சயம் இந்த நாஞ்சில் நாட்டு கோழி குழம்பை செய்து கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள்.

உங்களுக்கு நாஞ்சில் நாட்டு கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாஞ்சில் நாட்டு கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் -
* பட்டை - 1 சிறிய துண்டு
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 4
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா 3-4 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, பிரியாணி, இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, 5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து,
நன்கு வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு சிக்கன் மசாலா பொடியை சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில்
வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, தீயியை சற்று உயர்த்தி, தக்காளி
மென்மையாகும் வரை 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சிக்கனை கழுவி சேர்த்து மசாலாவுடன் சிக்கன் சேரும்
வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க
ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் 30-35 நிமிடம் சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான நாகர்கோவில் சிக்கன் குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications




