Latest Updates
-
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Mother's Day 2023: அன்னையர் தின ஸ்பெஷல் - கேரட் தேங்காய் பால் அல்வா
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த நினைக்கிறீர்களா?
ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் இதுவரை வீட்டில் சமையலறை பக்கமே சென்றதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சுவையான அல்வாவை உங்கள் கையால் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரட் தேங்காய் பால் அல்வாவை செய்து கொடுங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது வேகமாக செய்யக்கூடியது. உங்களுக்கு கேரட் தேங்காய் பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரட் தேங்காய் பால் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 கப் (துருவியது)
* தேங்காய் பால் - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* நெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கேரட்டை கழுவி , தோல் நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பாதமை சேர்த்து வறுத்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக குறைந்தது
5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் பாலை சேர்த்து, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, கேரட்டை நன்கு வேக வைக்க வேண்டும். தேங்காய்
பால் முழுவதும் வற்றுவதற்கு 10 நிமிடம் ஆகும். எனவே 10-15 நிமிடம்
நன்கு கேரட்டை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மீதமுள்ள நெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி,
மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளற வேண்டும்.
* அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, அதில்
வறுத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து கிளறினால், சுவையான கேரட் தேங்காய்
பால் அல்வா தயார்.
Image Courtesy: cooking4allseasons



Click it and Unblock the Notifications