Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
1 கப் பாசிப்பருப்பு இருந்தா போதும்... ருசியான ஊத்தாப்பம் செஞ்சு சாப்பிடலாம்.. எப்படின்னு பாருங்க..
Moong Dal Uthappam Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை சுட மாவு இல்லாத நேரத்தில் ஒரு சுவையான காலை உணவு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு ஊத்தாப்பம் செய்யுங்கள்.
இந்த பாசிப்பருப்பு ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இந்த ஊத்தாப்பத்திற்கு தக்காளி கொத்தமல்லி சட்னியை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு ஊத்தாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* ரவை - 2 டீஸ்பூன்
* கெட்டித் தயிர் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு
மேலே தூவுவதற்கு...
* வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* புளி - 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 சிறிய பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 2 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாசிப்பருப்பு நன்கு ஊறியதும், அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அதை
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடல் கடலை மாவு, ரவை, தயிர், மிளகு,
சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சோடா உப்பை சேர்த்து
நன்கு கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து ஊற வைத்து கொள்ள
வேண்டும்.
* அடுத்ததாக, சட்னியை செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்
பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் புளி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு நிறம் மாற
வறுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து ஒருமுறை
கொரகொரவென்று அரைத்து, பின் வதக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயத்தை
சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சட்னி தயார்.
* பின்பு ஒரு நாண்ஸ்டின் தவாவை அடுப்பில் வைத்து, தவா சூடானதும்,
அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மாவின் மேல்
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, விரும்பினால்
கேரட், குடைமிளகாயைத் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு ஊத்தாப்பம் தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications










