Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...!
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Pachai Payaru Dosa With Verkadalai Chutney In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? தினமும் தோசை கேட்பார்களா? ஆனால் உங்கள் வீட்டில் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறைக் கொண்டு தோசை சுடுங்கள். இந்த பச்சை பயறு தோசைக்கு வேர்க்கடலை சட்னி மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த காம்போவை செய்யுங்கள், வீட்டில் உள்ளோர் உள்ளோர் கேட்டு அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். .
உங்களுக்கு பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும். எப்படி செய்வதென்று தெரின்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னி ரெடிசபியின் எளிய செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு...
* பச்சை பயறு - 1 கப்
* பச்சரிசி - 1 * வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
சட்னிக்கு...
* வறுத்த வேர்க்கடலை - 75 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 8
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பச்சை மிளகாய், பச்சரிசி மற்றும் வெந்தயத்தை ஒரு
பாத்திரத்தில் எடுத்து நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 8 மணிநேரம்
ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்பு, அரிசியை சேர்த்து
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, ஜாரில் சிறிது நீரை
ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி,
மூடி வைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து மூடியைத் திறந்தால், மாவு புளித்து பொங்கி
வந்திருக்கும். பின் கரண்டியால் மாவை நன்கு கலந்துவிட வேண்டும்.
* தோசையானது இன்னும் சுவையாக இருக்க, அத்துடன் ஒரு பேஸ்ட்டை அரைத்து
சேர்க்க வேண்டும். அதற்கு மிக்சர் ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம்,
வரமிளகாய், சீரகம் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பேஸ்ட்டை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* அடுத்து சட்னியை செய்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய்,
சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், வேர்க்கடலை சட்னி தயார்.
* கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள
மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாகும் வரை வேக
வைத்து எடுத்தால், பச்சை பயறு தோசை தயார்.
* அடுத்தமதன மின்நர் நுரிசீரிச்



Click it and Unblock the Notifications

