Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மதியம் சாதத்துக்கு மொச்சைக்கொட்டையை வெச்சு இந்த மாதிரி புளிக்குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க..
Mochaikottai Puli Kuzhambu Recipe In Tamil: மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் மொச்சைக்கொட்டை உள்ளதா? அப்படியானால் அந்த மொச்சைக்கொட்டையைக் கொண்டு புளிக்குழம்பு செய்யுங்கள். இந்த மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு மொச்சைக்கொட்டை புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மொச்சைக்கொட்டை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8
* பூண்டு - 10 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
குழம்பிற்கு...
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் கீறியது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மொச்சைக்கொட்டையை
சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, நீரில் அலசிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய மொச்சைக்கொட்டையை குக்கரில் போட்டு, ஒரு 300 மிலி நீரை
ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 7-8
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு
சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு, சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் கிளறி,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, காய்கறிகள் வேக மூடி வைத்து
5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்த மொச்சைக்கொட்டை,
புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மொச்சைக்கொட்டை
புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
