Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
புதினா சட்னி அரைக்கும் போது இந்த 2 பொருளை சேர்த்து அரைங்க.. சட்னி சும்மா அள்ளும்...
Pudina Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு அடிக்கடி புதினா செய்வீர்களா? தற்போது கொளுத்தும் கோடையில் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் புதினா உடலின் குளிர்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.
ஆனால் நீங்கள் செய்யும் புதினா சட்னி அவ்வளவு ருசியாக இருக்காதா? அப்படியானால் அடுத்தமுறை புதினா சட்னி சுவையாக இருக்க வேண்டுமானால், அத்துடன் 2 பொருட்களை சேர்த்து அரையுங்கள். அது தான் சீரகம் மற்றும் பூண்டு. இந்த பொருட்களை சேர்த்து அரைக்கும் போது, சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு புதினா கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பச்சை மிளகாய் - 4
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள்
மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து,
பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து சுருங்க
வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், புளியை
சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த எள்ளு, கடலைப் பருப்பு மற்றும்
வரமிளகாயை மட்டும் சேர்த்து, பொடித்து, தனியாக ஒரு கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் புளி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
அத்துடன் புதினா, கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
சீரகம் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் சேர்த்து தாளித்து, கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான புதினா கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
