Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஆரோக்கியமான தினை மிளகு சீடை ரெசிபி... செஞ்சு பாருங்க... குழந்தைங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Millet Pepper Seedai Recipe in Tamil: குழந்தைகளுக்கான விடுமுறை காலம் தொடங்கி விட்டது. குழந்தைகளை சமாளிப்பதே பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக மாறியிருக்கும். குழந்தைகள் வீட்டிலிருக்கும் போது அவர்கள் அடிக்கடி கேட்கும் விஷயம் நொறுக்குத் தீனிகள்தான். குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் கடைகளிலிருந்து நொறுக்குத்தீனி வாங்க முடியாது. அது ஆரோக்கியமானதும் அல்ல மேலும் அது உங்கள் பட்ஜெட்டையும் பதம் பார்க்கும்.
இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு வீட்டிலேயே நொறுக்குத் தீனிகளை செய்வதுதான். இது செலவுகளைக் குறைப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நீங்கள் வீட்டில் செய்யும் நொறுக்குத்தீனிகளை சிறுதானியங்கள் கொண்டு செய்வது அதன் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு சீடை என்றால் என்னவென்று தெரிந்திருப்பது கடினம்தான். குட்டி குட்டி உருண்டைகளாக சாப்பிட மொறுமொறுவென்று இருக்கும் சீடையின் அருமை 90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும். இந்த சுவையான நொறுக்குத் தீனியை சிறுதானியத்தில் செய்வது கூடுதல் சிறப்பாகும். இந்த பதிவில் தினை அரிசியில் காரசாரமான சீடை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் தினை அரிசி அல்லது பச்சரிசி
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவு
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
- 2 ஸ்பூன் பொடித்த கருப்பு மிளகு
- 2 ஸ்பூன் எள்
- 2 ஸ்பூன் வெண்ணெய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
- தினை அரிசியை நன்றாகக் கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், மீண்டும் கழுவி, தண்ணீரை வடித்து, சுத்தமான காட்டன் துண்டு மீது பரப்பி 15 நிமிடங்கள் காய வைக்கவும்.
- நன்றாக காய்ந்ததும் இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து தனியாக வைத்து விடவும்.
- பின்னர் இந்த மாவை நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் சேர்க்காமல் இந்த மாவை நன்றாக வறுக்கவும். மாவின் நிறம் மாறிவிடக்கூடாது.
- பின்னர் உளுந்து மாவையும், கடலை மாவையும் இதே போல மிதமான தீயில் வறுத்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தினை அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள், நொறுக்கிய கருப்பு மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
- பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக சிறிய உருண்டைகளாக உருட்டவும். இந்தஉருண்டைகளை ஒரு துணி அல்லது தட்டின் மீது வைக்கவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீடையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். நெருப்பு மிதமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
- சீடை நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு டிஸ்யூ பேப்பருக்கு மாற்றி எண்ணெயை வடிகட்டவும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான தினை அரிசி சீடை தயார்!



Click it and Unblock the Notifications